- 09:35:00
- ஐயாச்சாமி முருகன்
- Current Affairs
- No comments
நடப்பு நிகழ்வுகள் 24,25,பிப்ரவரி-2016 – ரயில்வே பட்ஜெட்2016
ரயில்வே பட்ஜெட் 2016-2017
· ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு இரண்டாம் முறையாக தாக்கல் செய்கிறார்,1920 ஆம் ஆண்டு ரயில்வேத் துறையை சீரமைப்பதற்காக பிரிட்டிஷ் அரசு 1920 ஆம் ஆண்டு அக்வர்த்( Acworth) குழு அமைத்தது அந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1924 ஆம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டுபாரளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது
கூடுதல் தகவல்கள்:
Ø சுதந்திரத்திற்குப் பின் முதல் ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் ஜான் மாத்தாய்தாக்கல் செய்தார்.
Ø இரண்டாவது ரயில்வே அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசாமி அய்யங்கார் 1948-52 ஆம் வரை பணியாற்றினார.
சிறப்பு தகவல்கள் 2016-17
Ø பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
Ø ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,புதிதாக 3 அதி விரைவு (சூப்பர் ஃபாஸ்ட்) ரயில்கள், மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தில் (கீழ்ப் படுக்கை) 50 சதவீத ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன
Ø தில்லி-சென்னை சரக்குப் பாதை: சரக்கு போக்குவரத்துக்காக 3தனி ரயில் தடங்கள் (ஃபிரைட் காரிடார்ஸ்) அமைக்கப்படவுள்ளன. அவை தில்லி-சென்னை (வடக்கு-தெற்கு), கோரக்பூர்-மும்பை (கிழக்கு-மேற்கு), கோரக்பூர்-விஜயவாடா (கிழக்கு கடற்கரை) இடையே அமையும். எதிர்வரும்2019-ஆம் ஆண்டுக்குள் இந்த சரக்குப் போக்குவரத்து தனி ரயில்பாதை அமைக்கப்படும்.
Ø அதிவிரைவு ரயில்கள்: ஹம்சஃபர், தேஜஸ், உதய் ஆகிய 3அதிவிரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்களின் வசதிக்காக அந்த்யோதயா அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது."தீனதயாளு' முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள்நடைமுறைக்கு வர இருக்கின்றன. அவற்றில் குடிநீர், அதிக அளவிலான செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்யும் வசதி இருக்கும்.
Ø இந்தியாவின் முதல் "ரயில்வே ஆட்டோ ஹப்' (ரயில்வே வாகன முனையம்) சென்னையில் விரைவில் தொடங்கப்படும். சென்னையில் பெருமளவில் தயாரிக்கப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள், ரயில்கள் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். ரயில்வே வாரியம் மறுநிர்மாணம் செய்யப்படும்.
நடப்பு நிகழ்வுகள்
Ø உங்கள் சொந்த இல்லம்' எனும் திட்டத்தின் கீழ்,மேலக்கோட்டையூரில் 47.60 ஏக்கரில் ரூ.459.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காவலர்களுக்கான 2,673 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
Ø தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் டி.பிரபாகர ராவை நியமித்து,எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலர் என்.எஸ்.பழனியப்பன் (பொறுப்பு) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Ø வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) ரூ.3,19,920-க்கு தத்தெடுத்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்துப் பராமரிக்கும் திட்டம் 2009 }ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Ø புதுக்கோட்டை நகராட்சி நரிமேடு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் கல்மரத் துண்டைதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அண்மையில் கண்டெடுத்தனர். தமிழகத்தில் அரியலூர், கடலூர் மாவட்டம் துருவங்கரை, பெரம்பலூர் போன்ற இடங்களில் கல்மரப் படிவங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
Ø அருணாசலப் பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கலிகோ புல், மாநில சட்டப்பேரவையில் 40எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வியாழக்கிழமை தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
Ø புதுச்சேரி உள்பட 13 நகரங்களை "அம்ருத்' ( அடல் நகர்ப்புற புத்தாக்கத் திட்டம்) திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக,ரூ.495 கோடியை முதலீடு செய்வதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
Ø தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தலைவராக தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாஹுவும், அகில இந்திய வானொலியின் இயக்குநராக ஃபயாஸ் ஷெஹர்யாரும்நியமிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Ø மத்திய தகவல் ஆணையத்துக்கு (சிஐசி) மேலும் மூன்று ஆணையர்கள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனர். இதையடுத்து,ஆணையத்தில் மொத்தம் உள்ள 10 ஆணையர் பதவிகளுக்கான இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் பணியாளர் தேர்வாணையத் தலைவராகப் பணியாற்றியவருமான அமிதவா பட்டாச்சார்யா, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பிமல் ஜுல்கா, மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் பாதுகாப்புப் பிரிவில் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திவ்ய பிரகாஷ் சின்ஹா ஆகியோரை தகவல் ஆணையர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது.
Ø அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.